உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வீரம்புகெதர மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது, ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரம்புகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுகமுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 120 கிராம் ஹெரோயின் மற்றும் 75 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கலுகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபோதல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சோதனையின் போது, 71 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மாபோதல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0