உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மாணவிகளை சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய மாணவன் 14 நாள் சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் மாணவி ஒருவரது புகைப்படம் மற்றும் இன்னொரு மணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் “ரிக்ரொக்” சமூக ஊடகத்தில் கீழ்த்தரமான பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

இன்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீடிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர்.

இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தையார் நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தால் குறித்த நபர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.இவ்வாறான பின்னணியில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசில் இரு மாணவிகளின் பொற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசார் இருவரையும் இன்றையதினம் (17) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.இன்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாள்களும், மாணவனின் தந்தையை 14 நாள்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0