உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இணையவழி மோசடி: 134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!.

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கையில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் இயங்கி வந்த பாரிய இணையவழி மோசடி வலையமைப்பை இலக்கு வைத்து இன்று விசேட சுற்றிவளைப்புச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ புலனாய்வு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களங்கள் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையில், அந்தப் பகுதிகளில் உள்ள ஐந்து தங்குமிட விடுதிகள் முற்றுகையிடப்பட்டு 134 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனைத்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அதிக விசாரணைகள் மூலம், இந்தச் சட்டவிரோத வலையமைப்புடன் தொடர்புடைய பிற நபர்களையும் கண்டறிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

72 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

54 0 0