வலுசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணை: கையொப்பமிட தமிழரசுக் கட்சியினர் மறுப்பு!
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவு, அமைச்சரைச் சுற்றிய நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாமை, நீதிமன்ற நடவடிக்கைகள் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்டிருப்பது மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் அரசியல் குழப்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் அபாயம் ஆகிய மூன்று காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கமாட்டதாக அறிவித்துள்ளது