உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மீண்டும் இருளில் மூழ்குகின்றதா நாடு?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை (மின்வெட்டு) நோக்கித் தள்ளப்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சபையில் உரையாற்றிய அவர், நுரைச்சோலை மின் நிலையத்தின் உற்பத்தி வீழ்ச்சி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தரவுகளைப் பகிரங்கப்படுத்தினார்.

நுரைச்சோலையில் சரிந்த மின் உற்பத்தி
கடந்த நான்கு நாட்களில் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி பின்வருமாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

  • மார்ச் 13: 130 மெகாவோட் குறைவு
  • மார்ச் 14: 135 மெகாவோட் குறைவு
  • மார்ச் 15: 132 மெகாவோட் குறைவு
  • மார்ச் 16: 148 மெகாவோட் குறைவு

டீசல் மின் நிலையங்களும் சிக்கலில்
நுரைச்சோலையில் ஏற்படும் இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், அதற்கு மாற்றீடாக டீசல் மூலம் இயங்கும் மின் நிலையங்களை நாட வேண்டியுள்ளது. எனினும், தற்போது நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, டீசல் மின் நிலையங்களை முழுமையாக இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்த மாதங்களில் மின்வெட்டு?
இந்த நிலைமை இதே வேகத்தில் தொடருமாயின், எதிர்வரும் ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் திட்டமிட்ட மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இது ஒரு சாதாரண எச்சரிக்கை அல்ல, தரவுகளுடன் கூடிய அபாயம். இந்த ஆபத்தான நிலையைத் தவிர்க்க அரசு உடனடியாகத் தீர்வைக் காண வேண்டும்” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

50 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0