உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தேசியக் கொடியை இறக்கி கறுப்புக் கொடி ஏற்றியமை; யாழ். பல்கலை மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பில் மாணவ தலைவர்கள் உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி ஆலோசனையின் கீழ் இந்த விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியினால் யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் மூன்று மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • தர்மலிங்கம் ஜதுர்சன் (கலைப்பீட மாணவர் சங்கத் தலைவர்)
  • தயாபரன் லஜிதரன் (சிரேஷ்ட மாணவர் சங்கத் தலைவர்)
  • ஏ. அபிசேக்

சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி தரையில் எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக கறுப்பு நிறக் கொடியை ஏற்றியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்யவே இவர்களைக் குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

மாணவர் ஒழுக்காற்று அதிகாரிகளால் இந்தக் கடிதம் இன்று காலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

“பதிவாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தை வைத்துக்கொண்டு மாணவர்கள் எப்படி பொலிஸ் நிலையம் செல்ல முடியும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது எனவும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராகக் கடுமையான உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், எதிர்காலத்தில் இத்தகைய தேச விரோதச் செயல்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

50 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0