உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வில் கலாநிதி முபாரக் ஹாஜியாருக்கு பாராட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நேற்று (16) மாலை சாய்ந்தமருது தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், பைத்துஸ் ஸக்காத் நிதியம், வர்த்தகர் சங்கம் மற்றும் முபாரக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்த இப்தார் நிகழ்வினை சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ. எஸ்.எம். முஜாஹித்தின் புதல்வர் சைபுல் ஷிஹாப் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இப்தார் சிறப்பு பயான் மற்றும் துஆவை அஷ்-ஷெய்க் மௌலவி ஐ.எல்.எம். ரஃபி நிகழ்த்தினார். கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக் ஹாஜியார் பற்றிய சிறப்பு உரையினை சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமர் நிகழ்த்தினார்.

இதனுடன், சாய்ந்தமருதிலுள்ள முக்கியமான மூன்று பெரிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி திறமையாக வழிநடத்தி சமூக சேவைகளிலும் முன்னிலை வகித்து வருவதுடன், தனது அகவை 50 இல் கால்பதித்துள்ள கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக் ஹாஜியாருக்கு சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை வழங்கினர்.

அவரது சமூகப் பணிகள், சமுதாய முன்னேற்றத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புகள் மற்றும் தலைமைத் திறன் ஆகியவற்றை பாராட்டி, அவர் தொடர்ந்தும் சமூகத்திற்கும் வர்த்தகத் துறைக்கும் பல சிறப்புகளை உருவாக்க இறைவன் அருள் புரிய வேண்டுமென அனைவரும் வாழ்த்தினர்.

நிகழ்வினை சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.எம்.றிம்ஸான் தொகுத்து வழங்கினார்.

இந்த இப்தார் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல சகோதர ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் எஸ்.எம்.அறூஸ், எம்.சஹாப்தீன், அஸ்லம் மௌலானா, ஏ.டி.சத்தார், யூ.கே. காலிதீன், ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறூக் ஷிஹான், எஸ்.அஷ்ரஃப்கான் மற்றும் சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ. எஸ்.எம்.முஜாஹித், பிரதித் தலைவர் எம்.வை.அமீர், பிரதி செயலாளர் எம்.எம்.ஜபீர் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஒற்றுமையுடனும் ஆன்மீகத் தன்மையுடனும் இப்தாரை நிறைவேற்றினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

50 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

48 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0