உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வர்த்தக முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தி பீடிகள் தயாரிப்பு; சிக்கிய நால்வர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

பிரபல பீடி நிறுவனமொன்றின் வர்த்தக முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தி பீடிகள் தயாரித்து சந்தைக்கு விநியோகித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று திங்கட்கிழமை (16) இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போலி வர்த்தக முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான பீடிகள் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 31 முதல் 62 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பமுணுகம, நாரங்கொட மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

50 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

46 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0