உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களினால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் உருளைக்கிழங்கில் 80 சதவீதமானவையும், வெங்காயத் தேவையில் 80 சதவீதமானவையும், பருப்புத் தேவையில் 100 சதவீதமானவையும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகள் காரணமாக இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு நாம் பெருமளவில் இறக்குமதியையே நம்பியிருக்கிறோம்.

எனவே, தற்போதைய சர்வதேச சூழலில் இவற்றின் விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், முறையற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாகச் செயற்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

50 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

48 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0