உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

புதன்கிழமை விடுமுறை எதிரொலி; சபை அமர்வு நாளை இரத்து.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விசேட அரச விடுமுறை காரணமாக, நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை விசேட அரச விடுமுறை தினமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற அமர்வுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

நாளைமறுதினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே திட்டமிட்டபடி சபை அமர்வு இடம்பெறும்.

நாளை நாடாளுமன்றம் கூடாத போதிலும், நாளைமறுதினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே திட்டமிட்டபடி சபை அமர்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி சேமிப்பு மற்றும் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு முன்னெடுத்துள்ள இந்தத் தீர்மானம், நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

50 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

67 0 0
இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

52 0 0