உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பகுதியில் நேற்று மாலை பாரவூர்தி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அத்துருகிரிய பகுதியில் நேற்று மாலை அதிவேக நெடுஞ்சாலை மேம்பால வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்று, எதிரே வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, உந்துருளியில் பயணித்த அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரணை – நீருல்ல வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்று, பின்னோக்கி நகர்ந்து பின்னால் வந்த வேன், முச்சக்கரவண்டி மற்றும் இரு பாரவூர்திகளுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

40 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

58 0 0