உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

QR நடைமுறையால் வாகன உரிமை மாற்றம் செய்தோர் அவதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் அந்தரிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்ப்பட்டுள்ள போர் பதற்ற நிலைமை காரணமாக நாட்டில் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்குடன் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காலப்பகுதியில் ஏற்கனவே பதிவு செய்து தங்களது தொலைபேசி இலக்கத்தினையும், வாகனத்தையும் மாற்றாது வைத்திருப்பவர்கள் இலகுவாக அதனை புதுப்பித்துக்கொள்வதற்கான வசதிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் பழைய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் அல்லது வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள் இந்த QR அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் வன்னி மாவட்டத்தில் அதிகமான பொதுமக்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் பழைய உரிமையாளர்களை தேடியலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள் இலகுவாக QR அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ரீதியான அணுகலை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

38 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

58 0 0