உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

யாழில் கோர விபத்து; அண்ணன், தங்கை உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவர் துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (வயது 24) மற்றும் அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பவுசர் வாகனத்துடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தின் வீரியம் காரணமாக இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு, கடுமையான காயங்களுக்கு உள்ளாகி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் உயிர்கள் விபத்தில் பறிபோயுள்ளமை மணியந்தோட்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த பொதுமக்களும், உறவினர்களும் கண்ணீர் மல்கக் கூடியிருந்தமை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விபத்துக்குக் காரணமான பவுசர் வாகன சாரதி மற்றும் வாகனம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேரத்திற்கு முந்தி பேருந்து சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் விளக்கம்!

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எமது…

40 0 0
இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

40 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

58 0 0