உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

பிலியந்தலை – கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மிலிந்த மதுசங்க விஜேசிங்க என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் மனைவியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் (11), உயிரிழந்த இளைஞன் மற்றொரு ஊழியருடன் இணைந்து இயந்திரத்தின் தினசரிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஒன்றைச் சரிபார்ப்பதற்காக மற்றைய ஊழியர் ஒருபுறமாக இயந்திரத்துக்குள் தலையை நுழைத்துள்ளார். அதேநேரம் மிலிந்தவும் இயந்திரத்தின் மறுபுறமாகத் தலையை நுழைத்துச் சரிபார்க்க முயன்றுள்ளார்.

அவ்வேளையில், அச்சு இயந்திரம் எதிர்பாராத விதமாகத் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளது. இதில் மிலிந்தவின் தலை இயந்திரத்தினுள் சிக்கிப் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஏனைய ஊழியர்கள் மீட்டு உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்தக உதய குமார சம்பவ இடத்துக்கு வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0