உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பிரித்தானியாவின் பணத்தாள்களில் விலங்குகளின் உருவப்படங்கள்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

பிரித்தானியாவின் பணத்தாள்களில் (Banknotes) காலங்காலமாக இடம்பெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களின் உருவங்களுக்குப் பதிலாக, இனி உள்நாட்டு வனவிலங்குகளின் உருவங்களை அச்சிட இங்கிலாந்து வங்கி (Bank of England) தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்து வங்கியின் புதிய அறிவிப்பின்படி, தற்போது புழக்கத்தில் உள்ள 5 பவுண்டு பணத்தாளில் இடம்பெற்றுள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் உருவம் நீக்கப்படவுள்ளது.அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் இயற்கை வளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வனவிலங்குகளின் படங்கள் இனி இடம்பெறவுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுமக்களுடனான ஆலோசனையில், பணத்தாள்களில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கருப்பொருள்களே அதிக வரவேற்பைப் பெற்றன.இதன் விளைவாகவே, வரலாற்று நாயகர்களுக்குப் பதிலாக விலங்கினங்களைச் சேர்க்க வங்கி முடிவு செய்துள்ளது.

இது ஒரு “முக்கியமான” மற்றும் “காலந்தாழ்ந்த” நடவடிக்கை என வங்கியின் வனவிலங்கு நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல பறவை ஆர்வலர் நதீம் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய 5, 10, 20 மற்றும் 50 பவுண்டு பணத்தாள்களில் எந்தெந்த விலங்குகளின் படங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.

இங்கிலாந்தின் பூர்வீக உயிரினங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.இரண்டாம் உலகப் போரின் நாயகராகக் கருதப்படும் சர்ச்சிலின் உருவம் மாற்றப்படுவது ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள்கள் புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில், மறுபுறம் உள்ள உருவப்படங்களில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0