யாழ் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு.!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓ பொசிடிவ் வகை குருதிக்கான கடும் பற்றாக்குறை நிலை காணப்படுவதாக குருதி வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், ஓ பொசிடிவ் வகை குருதி உடையவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிக்கு நேரடியாக வருகை தந்து குருதி கொடை வழங்கி, உயிர்களை காப்பாற்றும் மனிதாபிமான பணியில் ஒத்துழைப்பு வழங்குமாறு குருதி வங்கிப் பிரிவினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.