இரண்டு கடைகளில் சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்பு.!
யாழ்ப்பாணத்தில் இன்று (12.03.2026) இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நான்கு கடைகள் மற்றும் ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடை சோதனை செய்யப்பட்டன. இதில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த இரு கடைகளில் உள்ள உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நடைபெற்றுள்ளது.மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதைப் பற்றிய நடவடிக்கைகள் தற்போது பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.