உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தெற்கு கடற்பரப்பில் ஈரானியக் கப்பல்கள் ஏற்படுத்திய சூழல் பாதிப்புகள் கண்காணிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இரண்டு ஈரானியக் கப்பல்கள் தெற்கு கடற்பரப்பில் பிரவேசித்ததைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீது ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு வருகிறது.


கடந்த 7 ஆம் திகதி முதல் ஆழ்கடல் ஆய்வுகள் மற்றும் பவளப்பாறைகளுக்கு அருகில் மூழ்கி ஆய்வு செய்யும் நடவடிக்கைகள், கடற்படை மற்றும் கடலோரக் காவற்படை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஹிக்கடுவை மற்றும் தொடங்கந்தூவ பகுதிகளில் கரையோரம் எண்ணெய் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் ஒதுங்கியுள்ளன.

இவை ஈரானியக் கப்பல்களில் இருந்து வந்தவையா என உறுதிப்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகள் மேலதிக ஆய்விற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குஅனுப்பப்பட்டுள்ளன.


வனவாழ் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிப்பதற்கேற்ப, இதுவரை கடல் ஆமைகள் அல்லது பிற கடலோர விலங்குகள் பாதிக்கப்படாமை உறுதியாக உள்ளது. பவளப்பாறைகளின் பாதிப்புகள் குறித்து அறிய, ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்படுவதை எதிர்பார்க்கிறோம் என்று கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை பொது முகாமையாளர் ஜகத் குணசேகர தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

41 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0