உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

யாழ் நீதிமன்றில் முற்படாத சந்தேகநபர்கள் 6 பேருக்கு பிடியாணை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கான தவணைகளில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாத பட்சத்தில் அவர்களது சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு பொலிஸாரால் சந்தேக நபர்களின் வசிப்பிடங்களிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பத்திராஜா மற்றும் யாழ்ப்பாணம் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இந்திக்க ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் இந்த நடவடிக்கை இன்றுமுன்னெடுக்கப்பட்டது.


நீதிமன்ற கட்டளை காட்சிப்படுத்தப்பட்ட இன்றைய தினத்திலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலோ அல்லது யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்திலோ காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்னிலையாகுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு முற்பட தவறும் பட்சத்தில், குறித்த நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த கட்டளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டதுடன், பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

48 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

30 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

51 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

46 0 0