உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நெல்லியடியில் வாள்வெட்டு: மாமியார் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மாமியார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மாமனார் படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


தகவல்களுக்கு அமைவாக, மனைவியின் தந்தையாரை வாளால் தாக்கி படுகாயப்படுத்திய பின்னர், மனைவியின் தாயாரை வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தையடுத்து பருத்தித்துறைபொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னர், குறித்த சந்தேக நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

48 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

30 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

51 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

46 0 0