உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இலங்கையில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 18,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கடந்த 2025ஆம் ஆண்டில் இந்த நோயினால் சுமார் 200 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

உலகில் அதிகப்படியான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட நிபுணர் மருத்துவர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண், மனித உடலில் உள்ள காயங்கள், வெட்டுக்கள் அல்லது மெல்லிய சவ்வுகள் ஊடாக உடலுக்குள் செல்வதன் மூலம் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுகின்றது.

குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

48 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

30 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

51 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

46 0 0