உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

உயர் நீதிமன்றம் மகிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பை ஒத்திவைத்தது!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (11) நிறைவு செய்தது.

இதனையடுத்து, இந்த மேன்முறையீடுகளின் மீதான தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது, பிரதிவாதிகளான மேன்முறையீட்டாளர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளின் வாதங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவடைந்தன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

50 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

32 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

51 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

46 0 0