அரசியல் எதிர்காலம் தொடர்பாக ஓ.பி.எஸ் முக்கிய ஆலோசனை.!
சென்னை: திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படும் அரசியல் வாய்ப்பு தொடர்பாக, ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுகவில் தனது நிலை பலவீனமடைந்ததை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம், அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அவை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தனித்தே கட்சி அமைப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், திமுகவின் சில சட்டமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பரிமாற்றங்கள் மற்றும் முதலமைச்சருடன் நடைபெற்ற சந்திப்புகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
முதலாவது சந்திப்பில் கட்சியில் இணையும் வாய்ப்பு குறித்து பேசப்பட்டதாகவும்,அதன் போது சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை, இரண்டாவது சந்திப்பில் உயரிய பதவி மற்றும் சில தேர்தல் இடங்கள் வழங்கும் வகையில் ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாய்ப்பை ஏற்கலாமா அல்லது மாற்று அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்து அவர் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசியல் சூழல் மாறி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட முடிவு குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. திமுக தரப்பில், அவர் விரைவில் தெளிவான முடிவுடன் வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.