ஹட்டனில் விஷவாயுனால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
நோட்டன் காபேக்ஸ் பாடசாலை மாணவர்கள் விஷ வாயுனால் பாதிக்கப்பட்ட நிலையில் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் இன்று 05 ம் திகதி மதியம் 1 மணிக்கு இடம் பெற்று உள்ளது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
இன்று மதியம் ஒரு மணி அளவில் நோட்டன் காபேக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் விளையாடி கொண்டு இருந்த வேளையில் விளையாட்டு பகுதியில் கிடந்த குழாய் ஒன்றை எடுத்ததுள்ளனர்
அந்த குழியில் இருந்து புகையிலான வாயு கசிவை தொடர்ந்து பெண் மாணவிகள் 6 பேர் 9 ஆண் மாணவர்கள் அடங்கிய தரம் ஏழில் கல்வி பயிலும் 15 மாணவர்கள் மயங்கிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.


