உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருத்தித்துறை நகரில் திடீர் சோதனை; வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு.!

இலங்கை செய்திகள் 11 நிமிடங்கள் முன்
36 பார்வைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையின்போது காலாவதியான அரிசி உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று உணவகங்கள் உட்பட 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பருத்தித்துறை நகரில் மக்கள் அதிகளவில் திரளும் பரபரப்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திடீர் சோதனை நடவடிக்கை நேற்று புதன்கிழமை மாலை 5 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை நகர சபைத் தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் இந்தத் திடீர் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கையின்போது 3 உணவகங்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் செயற்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.

அத்துடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதி திகதி கடந்த பாஸ்மதி அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதி குறிப்பிடப்படாது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோவுக்கும் மேற்பட்ட குத்தரிசிப் பொதிகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சுகாதார விதிகளை மீறிச் செயற்பட்ட 3 உணவகங்கள் மற்றும் 7 வர்த்தக நிலையங்கள் என மொத்தம் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பருத்தித்துறை நகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழன்.!

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன்…

57 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவர்களின்…

61 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ…

63 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான…

70 0 0