உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்கள் ஆணை வழங்கியது அபிவிருத்திக்கே தவிர அடக்குமுறைக்கு அல்ல! : நாடாளுமன்றத்தில் சஜித் ஆவேசம்

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
125 பார்வைகள்

அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது நாட்டின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அல்ல என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த அதிகாரம் கிடைத்தபோதிலும், அரசு மக்கள் வழங்கிய ஆணையை மீறி ஜனநாயக உரிமையைச் சீர்குலைக்கும் வகையில் அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

“அரசு இன்னமும் பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி மாதாந்த வறுமைக் கோடு 17 ஆயிரத்து 702 ரூபாயாக வரையறுக்கப்பட்ட போதிலும், இந்தத் தரவுகள் முற்றிலும் தவறானவையாகும்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு ஆணுக்கு 3 ஆயிரத்து 340 கிலோ கலோரிகளும், சுறுசுறுப்பான பெண்ணுக்கு 2 ஆயிரத்து 680 கிலோ கலோரிகளும் தேவைப்படுகின்றன. இவ்வாறான தவறான தரவுகளின் அடிப்படையில் வறுமைக் கோடு தயாரிக்கப்பட்டுள்ளதிலிருந்தே இந்த அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்பது புலப்படுகின்றது.

நாட்டில் 30% முதல் 40% வரையான மக்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்குப் பதிலாக வேலையின்மையே அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறைக் கொள்கைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைக் கூட இலங்கை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கின்றேன்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தொடர்ச்சியாகப் பொய் சொல்லும் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலாக இந்த அரசே திகழ்ந்து வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது அரசை விமர்சிப்பவர்களை அடக்குவதற்காகவே கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியில் இருந்த சமயம் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், இன்று அவர் அங்கம் வகிக்கும் அதே அரசே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் தாண்டிய கொடூரமான அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

அன்று ‘இருள் அரசுகள்’ குறித்துப் பேசியவர்கள், இன்று தாங்களே ஒரு இருள் அரசை  நடத்தி வருகின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

PAYE வரி விலக்கு வரம்பை ரூ. 162,500 ஆக உயர்த்தத் திட்டம்

உழைக்கும்  போது செலுத்தும் வரி வரம்பை 162,500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வரி செலுத்துநர்களுக்கு மேலும் நிவாரணத்தை…

0 0 0
இலங்கை செய்திகள்

கொக்கிளாய் பாலத்திற்காக 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு; தமது தொடர் முயற்சி வெற்றியளித்ததாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பில் தாம் உரியதரப்பினரிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்தநிலையில், 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில், குறித்த பாலத்தை அமைப்பதற்கு முதற்கட்டபாக 600மில்லியன்…

84 0 0
இலங்கை செய்திகள்

அப்பியாசக் கொப்பிகளுக்கும் அச்சிடப்பட்ட நூல்களுக்கும் Vat வரி நீக்கம்!

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட நூல்களும் ஏனைய அச்சிடப்பட்ட…

86 0 0
இலங்கை செய்திகள்

அரச நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

அரச சேவை நிறைவேற்றுதர அலுவலர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவு செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

75 0 0