உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழன்.!

இலங்கை செய்திகள் 32 நிமிடங்கள் முன்
63 பார்வைகள்

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார்.

இன்று 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறுகின்றது.

இதற்காக இலங்கை இளையோர் அணி கடந்த திங்கட்கிழமையே ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

வடமராட்சி – பருத்தித்துறையைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரியின் மாணவனான விக்னேஸ்வரன் ஆகாஷ், இலங்கை கிரிக்கெட் அரங்கில் மிகவேகமாக வளர்ந்துவரும் இளம் சுழற்பந்து வீச்சு நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்காளதேச அணிக்கு எதிரான தனது அறிமுக இளையோர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில், வெறும் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதுடன், தனது முதலாவது சர்வதேசப் போட்டியிலேயே ‘ஆட்டநாயகன்’ விருதையும் வென்றிருந்தார்.

அத்துடன், 2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்துக் களமிறங்கிய அவர், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திப் பிரகாசித்திருந்தார்.

தனது துல்லியமான சுழற்பந்து வீச்சால் இலங்கை தேசிய அணியின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச அரங்கிலும் முத்திரை பதித்து வரும் விக்னேஸ்வரன் ஆகாஷ், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் எதிர்கால முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்.!

தீபாவளி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் முதல் தடவையாக கம்பளை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அத்தியட்சகர் காரியாலயத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலும் ஏழு பொலிஸ் நிலையங்களில் உள்ள…

63 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகரில் திடீர் சோதனை; வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையின்போது காலாவதியான அரிசி உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…

44 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவர்களின்…

64 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ…

66 0 0