உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை – ஈரான் அறிவிப்பு!

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
87 பார்வைகள்

இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக் குழுவின் பிரதித் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் (Amir Hayat Moghadam) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக இந்தியக் கப்பல்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும், சீனாவின் அரசியல் ஆதரவைப் பெறும் நோக்கில் அந்நாட்டுக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்திய மற்றும் சீனக் கப்பல்களிடம் போக்குவரத்துக் கட்டணம் அறவிடப்படுவதாகவும், கட்டார் கப்பல்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈராக் கப்பல்களுக்கான கட்டண நடைமுறை குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் ப@லி!

இந்தியாவில் தெலங்கான மாநிலத்தில் சில்லறைப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) சிகிச்சை பலனின்றி பத்து நாட்களுக்கு…

88 0 0
இந்திய செய்திகள்

“உங்களை நம்பித்தான் இருக்கிறேன்” : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த உத்வேகம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த…

84 0 0
இந்திய செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசனத்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கான சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் ‘சுபம் ஃபெர்ரி’ (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர்…

96 0 0
இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக எஸ்.பி.பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளை பொலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.…

91 0 0