உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 37 நிமிடங்கள் முன்
75 பார்வைகள்

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக எஸ்.பி.பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளை பொலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உட்கோட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஹஷீஷ் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 2 கிலோ ஹஷீஷ் (கஞ்சா செடியில் இருந்து எடுக்கப்படும் பிசின்) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்த நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் மேலும் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 17.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்கரை மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் சிக்கியது. இவை இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் திருவாடானை தளிர் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த மனோ (34) என்பது தெரியவந்தது.

இவர் ஏற்கனவே தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்.

மேலும், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய வழக்கில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் மனோ தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் பெருமளவிலான ஹஷீஷ் போதைப்பொருளுடன் சிக்கிய அவரை பொலிஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட ஹஷீஷ் போதைப்பொருளின் மூலாதாரம், இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்ட வழிமுறை, கடத்தலுக்கு உதவியவர்கள் மற்றும் சர்வதேச கடத்தல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி.பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19.8 கிலோ ஹஷீஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் தலை மறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் கடலோரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? : தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு!

தமிழக தமிழிநாட்டில், வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமா என்ற…

93 0 0
இந்திய செய்திகள்

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் நிகழ்நேர கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டொலர் அல்லது 10.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்…

77 0 0
இந்திய செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா இன்று!

தமிழ்நாட்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று…

79 0 0
இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் கைப்பற்றல்.!

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.90 இலட்சம் மதிப்பிலான 245 கிலோ பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடலட்டைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர் வாகனத்தை விட்டுவிட்டு…

91 0 0