உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் நூதன முறையில் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(18.9.2026) மதியம் 2 மணியளவில் யாழ்.தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தபால் நிலையத்தில் இருந்து மனு அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தமது வேலை வாய்ப்பு தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விமல் வீரவன்சவின் கருத்துத் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிஹே தெரிவித்துள்ளார். குறிப்பாக, இலகு ரக…

20 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடும்…

19 0 0
இலங்கை செய்திகள்

யாழில் திலீபனின் நினைவுத் திடலில் பொருத்தப்பட்டிருந்த ஒலி எழுப்பிகள் பொலிசாரால் அகற்றல்!

திலீபனை நினைவுகூர்வதற்காக, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலி எழுப்பிகளை பொலிஸார் அகற்றிச் சென்றுள்ளனர். பொது இடத்தில் உரிய…

28 0 0