அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடும் கவலை வெளியிட்டுள்ளதுடன், அவரது உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இவ்வழக்கை வெளியுறவு அமைச்சகம் கையாண்ட விதம் மற்றும் மேல்முறையீட்டுச் செயல்முறை தொடர்பான தூதரகப் பொறுப்புக்கூறல் குறித்து கேள்வி எழுப்பி, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இவிவகாரத்தை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் இன்னமும் வெளியாவில்லை.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மத நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில், இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜன் என்பவருக்கு சவுதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.இருப்பினும், இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் இன்னமும் வெளியாவில்லை.