உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு (17.09.2026) நேற்று சுற்றுசூழலை பாதுகாப்போம் என்ற எண்ணகருவிற்கு அமைவாக மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளுக்குகிடையில் விவாதப் போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையின் இடம்பெற்றது.
இந்த விவாதப் போட்டியில் பாடசாலை மாணவர்கள் சிறப்பாக தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்வு மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர் என் பரமேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் கலந்து கொண்டனர்.

