உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இளைஞனை உயிருடன் மீட்டுத் தருமாறு தாயார் கண்ணீர் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
7 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர் மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞன் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பதிவை அவர் உடனடியாகவே சமூக ஊடகத்திலிருந்து நீக்கியதுடன், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.

மேன்முறையீட்டில் அதிகரித்த தண்டனை
இவ் வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு விசாரணைகளின் போது இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது தாயார்,
“எனது மகன் தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். அவனை மன்னித்து, உயிருடன் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுது புலம்பியவாறு வேண்டுகோள் விடுத்தார்.

இளைஞர் அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் சவூதி அதிகாரிகளுடன் அவசரமாக உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் பிரதேச சமூக தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் முடக்கம்.!

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு நபர்களுக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைப் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் முடக்கியுள்ளது. பணத்தூய்தாக்கல்…

19 0 0
இலங்கை செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது.!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர்…

9 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

23 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

26 0 0