உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

சினிமா 5 மணி நேரம் முன்
24 பார்வைகள்

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘கீதா ஆர்ட்ஸ்’ தயாரிக்கவுள்ளது.

‘ஜெர்ஸி’ மற்றும் ‘கிங்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இப்படத்தை இயக்கவுள்ளார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இறுதியாக ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சிறப்பம்சமாக, உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இசை உலகின் முக்கிய ஆளுமையான எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பது, அவருக்கு புதியதொரு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான…

13 0 0
சினிமா

சூர்யா – ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினரின் ‘20 Years of Love & War’ Collab காணொளி சமூக வலைத்தளங்களில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.…

21 0 0
சினிமா

திரைப்பட விளம்பரத்தில் அரசியல் கலக்கக் கூடாது : ஜேசன் சஞ்சய் வெளிப்படை!

முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அறிமுக திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

47 0 0
சினிமா

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், ‘சீயான்’ விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் (63 ஆவது படம் ) தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப்…

50 0 0