உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

அரசியல் நோக்கங்களுக்காகவே தொழிற்சங்க போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே பணிப்புறக்கணிப்பானது முழுக்க முழுக்க அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற்சங்க போராட்டமாகும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஊடகங்களுக்கு இன்றைய தினம் கொழும்பில் தெரிவித்தார்.

22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகச் தொழிற்பட்ட மற்றும் கையெழுத்திட்ட தரப்பினரே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பெயர்கள் மற்றும் பின்னணியை ஆராயும்போது இதன் பின்னணியிலுள்ள அரசியல் சதி தெளிவாவதாகக் குறிப்பிட்டார்.

இப்போராட்டம் காரணமாக பயணச்சீட்டுகள் வழங்கப்படாமல் ரயில்கள் இயக்கப்படுவதால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படுகின்ற போதிலும், தினசரி ரயிலைப் பயன்படுத்தும் மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காகவே பயணச்சீட்டுகள் இன்றியேனும் ரயில் சேவைகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கண்டி – பேராதனை ரயில் பாதை அபிவிருத்தி குறித்துப் பேசிய அவர், ‘களு பாலம்’ (கருப்பு பாலம்) புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போதைய பாலத்திற்குச் சமாந்தரமாக மேலும் ஒரு புதிய பாலத்தைக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டு வருவதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

36 0 0
இலங்கை செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை சர்ச்சைக்கிடையே சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள பிரபல…

30 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

31 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

44 0 0