உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக ஹவூதி அமைப்பினர் அறிவிப்பு!

உலக செய்திகள் 8 மணி நேரம் முன்
41 பார்வைகள்

யேமனின் மஃரிப் பகுதிக்கு மேல் சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தி ஒன்றை, தரைவழி-வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.

இந்த நிலைமையில், பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) கடல் வழிப்பாதைக்கு அருகில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

மஃரிப் வான்வெளியில் தாக்குதல் நடத்திய சவூதி கு-15 போர் வானூர்தியை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தங்களின் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா (Yahya Saree) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சவூதி தரப்பில் இருந்து இந்தக்கூற்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுவரைக் காலமும், சவூதி அரேபியா மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசு ஆகியவற்றின் மிகப்பெரிய பலமாக வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே இருந்தன.

எனினும் ஹூதிகளால் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடிந்தால், அது போரின் சக்தி சமநிலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், நம்பிக்கையைப் பெற நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.

ஈரானின் நிபந்தனைகள் ஏற்கும் வரை அமெரிக்காவுடான பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. புனிதத்…

45 0 0
உலக செய்திகள்

அதானியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்த டிக்டொக் நிறுவுனர்

டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார். ங்…

64 0 0
உலக செய்திகள்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு 25 வருட சிறைத் தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசி (Hashim Thaci) மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு…

51 0 0
உலக செய்திகள்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து : 70 ற்கும் அதிகமானோர் உயி@ரிழப்பு!

சூடானின் மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து வீழ்ந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அல்-நஹூத் (al-Nuhud) நகருக்கு…

46 0 0