உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
45 பார்வைகள்

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன் தலைமை அலுவலக ஊடக மையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இரட்சணிய சேனையின் (Salvation Army) போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் மேஜர் சந்திரலதா ஜயரத்னசிங்கம் தெரிவிக்கையில், இரட்சணிய சேனையானது இங்கிலாந்தில் ஜெனரல் வில்லியம் பூத் என்பவரால் போதைப்பொருளுக்கு அடிமையான மக்களை மீட்கும் நோக்கில் தொடங்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது எனக் குறிப்பிட்டார்.

சாதி, மத, வர்க்க பாகுபாடுகளின்றி, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் நாடிச் சென்று சேவை செய்வதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும் என்றும், ஒரு மனிதனை ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி, சமூக ரீதியாகவும் முழுமையாகக் கட்டியெழுப்பி, ஒரு சிறந்த பிரஜையாக மாற்றுவதே இரட்சணிய சேனையின் பிரதான இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், போதைப்பொருள் பயன்பாட்டினால் நாட்டின் பல குடும்பங்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருவதாக வேதனை வெளியிட்டார்.

இதனைத் தடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா போன்ற தொலைதூரப் பகுதிகளிலுள்ள சிறிய வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மாதமொன்றிற்கு சுமார் 300 குடும்பங்கள், 350 சிறுவர்கள் மற்றும் 250 இளைஞர்களைச் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மட்டுமன்றி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அனுராதபுரம் போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் இச்சேவைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், புனர்வாழ்வு பெற விரும்பும் நபர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, உரிய புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள விரும்புபவர்கள், புனர்வாழ்வு அல்லது ஆலோசனைகளைப் பெற விரும்புபவர்கள் 24 மணிநேரமும் இயங்கும் 077 6626 727 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

36 0 0
இலங்கை செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை சர்ச்சைக்கிடையே சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள பிரபல…

30 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

31 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

49 0 0