உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

“தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” செப்டம்பர் 25 இல் அங்குரார்ப்பணம்

இந்திய செய்திகள் 7 மணி நேரம் முன்
47 பார்வைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி மதுரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக குறித்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பர் 25ஆம் திகதி மதுரையில் நடைபெறவுள்ள நிகழ்வில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய மரபை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமனின் அன்பளிப்பாக 1பவுண் தங்க மோதிரத்தை வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், 2026 ஜூன் 22ஆம் திகதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் இந்திய பெறுமதியில் சுமார் ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதுடன், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளையும் அவர்களின் தாய்மார்களையும் கௌரவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

திமுகவின் முப்பெரும் விழா எதிர்வரும் 19-ம் திகதி நடைபெறவுள்ளது

வரும் 19-ம் திகதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக…

24 0 0
இந்திய செய்திகள்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு உள்நாடு முதல்…

45 0 0
இந்திய செய்திகள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!

திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில்…

63 0 0
இந்திய செய்திகள்

சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான…

33 0 0