உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இந்திய செய்திகள் 6 மணி நேரம் முன்
46 பார்வைகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு உள்நாடு முதல் உலக நாடுகள் வரையிலான தலைவர்கள், தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் விஜய் பொறுப்பேற்றார். அதன் பின்னர் பிரதமர் மோடியை டெல்லியில் அவர் இரண்டு முறை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

திமுகவின் முப்பெரும் விழா எதிர்வரும் 19-ம் திகதி நடைபெறவுள்ளது

வரும் 19-ம் திகதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக…

25 0 0
இந்திய செய்திகள்

“தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” செப்டம்பர் 25 இல் அங்குரார்ப்பணம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி மதுரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…

47 0 0
இந்திய செய்திகள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!

திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில்…

63 0 0
இந்திய செய்திகள்

சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான…

33 0 0