உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

தெஹிவளை கொ*லைச் சம்பவம்; பிரதான சூத்திரதாரி உட்பட நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
17 பார்வைகள்

தெஹிவளை – ஓபன் வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் வந்த குழுவொன்று வீடொன்றிலிருந்த நபர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி கொலை செய்திருந்தது.

இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (16) அங்குலானை, கந்தவல வீதி மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இக் குற்றத்தை மேற்கொண்ட நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ மற்றும் அங்குலானை பகுதிகளைச் சேர்ந்த 23, 24 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்களிடமிருந்து 17 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 04 வாள்கள் உள்ளிட்ட 05 கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொட்டகலையில் பார்வைக் குறைபாடுடைய 100 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, இன்று 17 ம் திகதி கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள்…

43 0 0
இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

42 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

38 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

40 0 0