உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
41 பார்வைகள்

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளை – ஹெலிஎல பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு கிராமம் கிராமமாக மக்கள் சந்திப்புகளை நடத்துவது எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளுக்குப் பயந்து அல்ல. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்தக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சூழ்நிலைகள் காரணமாகவே அவை தாமதமாகின. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய, அபிவிருத்திப் பணிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் அம்பலமாகி வரும் நிலையில், முந்தைய ஆட்சியாளர்களே மக்களிடம் பழிவாங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். நீதித்துறையின் செயற்பாடுகளில் அரசு எந்தவித தலையீடும் செய்யவில்லை. விசாரணைகளை முறையான மற்றும் விரைவான வழியில் நடத்துவதற்குத் தேவையான வசதிகளை மட்டுமே செய்து கொடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வு விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்போது, சிதைந்துபோன எதிர்க்கட்சிக் குழுக்கள் அச்சம் காரணமாக ஒன்றிணைய முற்படுவது இயல்பான ஒரு விடயமே தவிர, அதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ என்ற பாகுபாடின்றி சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொட்டகலையில் பார்வைக் குறைபாடுடைய 100 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, இன்று 17 ம் திகதி கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள்…

43 0 0
இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

43 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

38 0 0
இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

42 0 0