உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படவே கூடாது; ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
41 பார்வைகள்

“முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக் கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட வேண்டும். மக்கள் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்லாத வகையில், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய மருத்துவ விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் பங்கேற்றார்.

போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின்தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வெறுமனே அபிவிருத்திக்கான எதிர்பார்ப்பு அல்ல, நாட்டின் ஏனைய மக்களைப் போலவே சமமான வாய்ப்புகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு என்று இந்த நிகழ்வில் உரையாற்றும்போது குறிப்பிட்ட ஆளுநர், அந்த எதிர்பார்ப்புக்கு படிப்படியாகப் பதில் கிடைத்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டதுடன், அதன் பணிகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அந்தப் பாலம் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அன்றாட மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் முக்கிய உட்கட்டமைப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் தற்போதைய நோயாளர் விடுதி நிலைமைகளைத் தாம் நேரில் பார்வையிட்ட பின்னரே அதன் தேவைகளைத் தெளிவாக உணர முடிந்தது என்று தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு 135 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், அது விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், இந்திய மக்களின் நிதியுதவியுடன் தற்போது மற்றுமொரு முக்கியமான சுகாதார உட்கட்டமைப்புத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்ட ஆளுநர், மருத்துவமனைக்கு கட்டடம் மட்டுமன்றி, மருத்துவர்களுக்கான வசதிகள், நோயாளிகளுக்கான தரமான சிகிச்சை மற்றும் தேவையான மருத்துவ மனிதவளம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் வலுவான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மக்கள் சிகிச்சைக்காக ஏனைய மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே முன்னுரிமை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாகாண பெண்கள் சிறப்பு மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை (ஐ.வி.எஃப்.) முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

பொது சுகாதார அமைப்புக்குள் இத்தகைய நவீன சிகிச்சையை இலவசமாக வழங்கும் முயற்சி மிகவும் அரிதானதும் பாராட்டத்தக்கதுமானதொன்று என்று குறிப்பிட்ட அவர், அதிலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முன்னிலையில் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முதலாவது தொகுதியில் சிகிச்சை பெற்ற ஒரு தாய் தற்போது கர்ப்பம் தரித்திருக்கின்றார் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஒரு மருத்துவக் கட்டடத்தின் வெற்றியை எண்ணிக்கைகளால் அளக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், ஒரு தாய் தனது கருவில் ஒரு புதிய உயிர் உருவாகியுள்ளது என்பதை அறியும் தருணத்தின் மகிழ்ச்சியை எந்த எண்ணிக்கையாலும் அளக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தச் சேவையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த ஆளுநர், இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவக் குழுவினரையும், குறிப்பாக மருத்துவ நிபுணர் ரகுராமனையும் மனமாரப் பாராட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொட்டகலையில் பார்வைக் குறைபாடுடைய 100 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, இன்று 17 ம் திகதி கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள்…

43 0 0
இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

42 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

38 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

40 0 0