உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
96 பார்வைகள்

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் பன்முகத் தொடர்புகள் போலவே இரு தரப்பினரின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான, பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான உறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவ வேண்டிய அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய அபிவிருத்தி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கக்கூடிய உறவைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை மற்றும் இந்திய மக்களிடையே நிலவும் நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தினையும் இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் பேரணி!

செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக…

88 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் இரு பெண்கள் கைது.!

சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான…

129 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உ*யிரிழப்பு.!

கிளிநொச்சி – ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும்…

91 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை; இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளார் என்று ஒருசில ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. உயர்ஸ்தானிகர்…

63 0 0