உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
112 பார்வைகள்

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம் அமைப்பு பணிகளின் மேற்பார்வையாளரான தொழில்நுட்ப உதவியாளரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி மதுஞ்சளா கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 6 ஆம் கட்டை நெடியமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழியொன்றுக்குள் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்திருந்தான்.

6 ஆம்கட்டை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் முதலாம் வகுப்பைச் சேர்ந்த நாகராசா நவதீபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

6 கட்டைப் பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பாலம் அடைப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. இப்பாலத்திலத்திற்கு அருகில் பாரிய குழி தோண்டப்பட்டுள்ளது. அக்குழியில் நான்கரை அடி நீர் உள்ளது.

அக்குழியினை பார்வையிட்ட சிறுவன் கால் சறுகி உள்ளே விழுந்துள்ளான்.

சற்றுநேரத்தில் சிறுவனின் தயார் சிறுவனைத் தேடிச்சென்றவேளை குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட திணைக்களத்தினரால் தோண்டப்பட்ட குழிகள் உள்ள பிரதேசத்தில் அபாய அடையாளங்கள் எதுவும் இடவில்லையென பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலம் நிர்மாணிக்கும் இடத்தில் அபாய அறிவிப்புக்கள் தொடர்பான பதாகைகள் எதுவும் இடப்படவில்லை என்பதனால் மேற்பார்வையாளர் ஆயித்தியமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் குறித்த தொழில்நுட்ப உதவியாளர் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினராக நலிந்த பிரதீப் பதவியேற்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராகத் திரு. நலிந்த பிரதீப் அவர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக…

1 0 0
இலங்கை செய்திகள்

ஆசிரியர் சேவைக்கு தகுதி பெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பான கலந்துரையாடல்.!

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான…

101 0 0
இலங்கை செய்திகள்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச்…

84 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது. கடந்த 2008…

101 0 0