இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தியா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

