உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

மீனவர் பிரச்சினை: 25ஆம் திகதி இந்தியா செல்லும் இலங்கை அதிகாரிகள் குழு

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
73 பார்வைகள்

இலங்கை – இந்தியா இடையே நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை அதிகாரிகள் குழு எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (05) வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்தப் பயணம் கச்சதீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வரும் இழுவைப்படகுகளால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் மற்றும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பிலேயே முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையைப் பாதுகாப்பது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கச்சதீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்த அவர், சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்பு மற்றும் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காகவே கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை மையமாகக் கொண்டு சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்புகளுக்கு இடையில் இடம்பெறும் அரசியல் போட்டி மக்களின் நலனுக்காக அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல் சக்திகள், தங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இதுபோன்ற அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவதாகவும் அமைச்சர் இ. சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல் சலசலப்புகளுக்கு இடமளிக்காமல், நாட்டின் எதிர்கால நலனை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதாள உலகக் குரோதம்; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற து***க்கிச் சூ**ல் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார்…

17 0 0
இலங்கை செய்திகள்

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக…

71 0 0
இலங்கை செய்திகள்

ஆயித்தியமலை அன்னையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) அதிகாலை நடைபெற்றது. மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு…

94 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் இனி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையக் கூடாது!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவசியம் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்குச் செல்லவுள்ள அதிகாரிகள் மட்டக் குழு, இனிவரும்…

60 0 0