உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

நைஜீரியாவில் நச்சு வாயு கசிவு – 37 பேர் பலி

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
39 பார்வைகள்

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற நச்சு வாயு கசிவு சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி அருகே, சட்டவிரோதமாக எரிபொருள் திருட முயன்றபோது ஏற்பட்ட நச்சு வாயு கசிவே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறிய படகுகளில் ஒகாரி ஜெட்டி பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்திரமா எலமே பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திலிருந்து போர்ட் ஹார்கோர்ட் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்படும் பிரதான எரிபொருள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட அவர்கள் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, குழாயிலிருந்து அதிக அழுத்தத்துடன் எரிபொருள் வெளியேறியதுடன், அதனுடன் தொடர்புடைய நச்சு வாயு காற்றில் வேகமாக பரவியுள்ளது.

இதனால் அப்பகுதியில் இருந்த இளைஞர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதுடன், பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

மயக்கமடைந்த பலர் போனி நதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 37 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரின் சடலங்கள் ஆற்றில் மிதந்து வருவதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ரிவர்ஸ் மாநில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நைஜீரியாவில் நிலவும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக சட்டவிரோத எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நேபாள வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 1,388 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,388 ஆக உயர்ந்துள்ளதாக…

68 0 0
உலக செய்திகள்

கடுமையாக வீழ்ச்சியடைந்த கப்பல் போக்குவரத்து!

சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய நரம்பாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியில் கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. Kpler நிறுவனம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட…

68 0 0
உலக செய்திகள்

ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை

ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…

66 0 0
உலக செய்திகள்

9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருக்குலைந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட…

50 0 0