உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

இந்திய மீனவர்கள் இனி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையக் கூடாது!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
57 பார்வைகள்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவசியம்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்குச் செல்லவுள்ள அதிகாரிகள் மட்டக் குழு, இனிவரும் காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான என்.எம். ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய, குறிப்பாக தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களின் நடவடிக்கைகள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதில் மாற்றுக் கருத்தில்லை எனக் குறிப்பிட்ட அவர், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதுடன், இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டோம் என்ற உறுதிமொழியையும் இந்திய தரப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அவ்வாறான உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்திலேயே வடமாகாண மீனவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனவும் என்.எம். ஆலம் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதாள உலகக் குரோதம்; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற து***க்கிச் சூ**ல் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார்…

15 0 0
இலங்கை செய்திகள்

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக…

67 0 0
இலங்கை செய்திகள்

ஆயித்தியமலை அன்னையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) அதிகாலை நடைபெற்றது. மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு…

90 0 0
இலங்கை செய்திகள்

டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கடும் கண்டனம்

ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கண்டனம் தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண…

64 0 0