உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் வழங்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 42 நிமிடங்கள் முன்
79 பார்வைகள்

மகிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளார் ஜான்சன் பிரிடாரோ வேண்டுகோள் விடுத்தார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ். வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் 20 ஆவது வாரமாக இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி வடக்கு மக்களின் சுமார் 6317 ஏக்கர் காணிகளை மகிந்த அரசாங்கம் கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.

மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அநுரகுமார தலைமையிலான அரசாங்கமும் குறித்த வர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசுகளைப் போல் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது.

வலி. வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவக்குமாறு கோரி மூன்று இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.

புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் குறிப்பாக வலி வடக்கு காணி இழந்த மக்கள் நம்பிக்கை வைத்த போதும் தற்போது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்.!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க –…

49 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

பாரவூர்தி ஒன்று உந்துருளி மீது மோதியதில் கணவன் மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.…

60 0 0
இலங்கை செய்திகள்

பொறுப்புக்கூறலை மேலும் பலப்படுத்துக; இலங்கை அரசிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை.!

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா.…

30 0 0
இலங்கை செய்திகள்

மாமுனை தம்பகாமம் அபாய வெளியேற்ற பாதையை பார்வையிட்ட ரஜீவன் எம்.பி.!

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாமுனையிலிருந்து தம்பகாமம் ஊடக பளைக்கு செல்கின்ற வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாது காணப்படுவதால் சுனாமி போன்ற அவசர நிலைமைகளில்…

34 0 0