உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கடும் கண்டனம்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
65 பார்வைகள்

ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கண்டனம்

தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காலத்தில் தங்களை ஜனநாயகவாதிகளாகவும் ஊடகங்களின் நண்பர்களாகவும் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, ஆட்சிக்கு வந்த பின்னர் ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இயலாமை, ஊழல் மற்றும் செயற்றிறனற்ற தன்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதால், தமது உண்மை நிலை மக்களிடம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்திலேயே இத்தகைய அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நீண்டகாலமாக சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன், கொள்கை ரீதியாகத் தவறு செய்யும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராகவும் துணிந்து கருத்துக்களைப் பதிவு செய்தவர் எனவும் சுகிர்தன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சுதந்திரமான ஊடகவியலாளர் ஒருவர் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளைக் கண்டித்து வந்தவர்கள், தற்போது அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடராத வகையில் அரசாங்கம் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதாள உலகக் குரோதம்; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற து***க்கிச் சூ**ல் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார்…

15 0 0
இலங்கை செய்திகள்

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக…

68 0 0
இலங்கை செய்திகள்

ஆயித்தியமலை அன்னையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) அதிகாலை நடைபெற்றது. மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு…

90 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் இனி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையக் கூடாது!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவசியம் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்குச் செல்லவுள்ள அதிகாரிகள் மட்டக் குழு, இனிவரும்…

57 0 0